Monday, April 19, 2010

நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு அமைப்பின் உடனடி செயல்திட்டத்திற்கான 10அம்ச கோரிக்கைகள்

1.விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதாரமான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடுகள் பாதுகாக்கப்படவெண்டும்.

2.ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற பொது நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி அகற்றப்பட்டு அதனுடைய முழுமையான கொள்ளளவு அடிப்படையில் தூர்வாரப்படவேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளம் தூர்வாறுதல் போன்ற பணிகளை கட்டாயம் இரண்டான்டுகளுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

3.இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தும் விதமாக இதுவரை கம்பெனிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் மனியங்கள் நிறுத்தப்பட்டு, பயிர்களின் வகைக்கேற்ற ஒவ்வொரு ஏக்கருக்கும் இவ்வளவு என நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யவேண்டும்.
உற்பத்தி செலவு, லாபத்தை உள்ளடக்கிய வருடம் முழுவதற்குமான சீரான ஞாயமான ( Fair Price) விலை நிர்ணய முறை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே விற்பனை செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படவேண்டும்.

4.இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எல்லா பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கான காப்பீட்டு திட்டத்தை வருடம் முழுவது செயல்படுத்த வேண்டும்.

5.விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்குமான உழவர் பாதுகாப்பு திட்டத்தை விட ஒருபடி மேலான திட்டத்தை முறையாக செயல்படுத்தி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கொடுக்கவேண்டும். மேலும் இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் எந்தவித நிபந்தனைகளும் இன்றி கல்விகடன் கொடுக்கவேண்டும்.

6.விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாய் தங்களுடைய நிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் மரங்களை நட ஊக்குவிக்கும் விதமாய் தேசிய காலநிலை மாற்ற தடுப்பு திட்டத்தில் (கிரீன் இண்டியா) விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்

7.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு 3% வட்டியில் விவசாய கடன் கொடுக்கவேண்டும்.

8.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விவசாயப்பணிகளுக்கு விரிவுபடுத்தி, 50% விவசாயிகளின் பங்கேற்புடன் செயல்படுத்தவேண்டும்.

9. கிராமப்புற மக்களின் அடிப்படை தொழில், நாட்டின் உணவு உற்பத்தி, பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் என்ற அடிப்படையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

10.மரபுசாரா எரிசக்தியை விவசாயத்துடன் இணைத்து தற்சார்பு விவசாயத்திற்கு வித்திடவேண்டும்.

No comments: