சென்னை, டிச. 25: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக ஓய்ந்து வருகிறது. 11 மாவட்டங்களில் இயல்பான அளவை விட அதிகம் பெய்துள்ளது. மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை ஒட்டுமொத்தமாக பதிவான சராசரி மழையளவு 419.1 மில்லி மீட்டரை எட்டியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 15 சதவீதம் அதிகம். புதுவையில் அதிக மழைப்பொழிவு: புதுச்சேரியில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த சராசரி மழையளவு 846.7 மில்லி மீட்டராகும். இது இயல்பான அளவை விட 39 சதவீதம் கூடுதலாகும்.
சென்னை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி மாவட்ட வாரியாக கடந்த 83 நாள்களில் பெய்துள்ள மழையளவு, அடைப்புக் குறிக்குள் இயல்பான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
சென்னை வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்களின்படி மாவட்ட வாரியாக கடந்த 83 நாள்களில் பெய்துள்ள மழையளவு, அடைப்புக் குறிக்குள் இயல்பான மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
- அரியலூர் 584.6 (438.9)
- சென்னை 799.8 (725.1)
- கோயம்புத்தூர் 297.7 (320.1)
- கடலூர் 959.1 (694.3)
- தர்மபுரி 244.3 (311.8)
- திண்டுக்கல் 467.3 (386.6)
- ஈரோடு 324.6 (317.7)
- காஞ்சிபுரம் 757.1 (679.9)
- கன்னியாகுமரி 451.0 (418.5)
- கரூர் 343.5 (357.9)
- கிருஷ்ணகிரி 231.9 (287.8)
- மதுரை 301.8 (360.9)
- நாகப்பட்டினம் 1,339.9 (846.1)
- நாமக்கல் 207.5 (287.5)
- நீலகிரி 872.6 (359.3)
- பெரம்பலூர் 435.3 (43894)
- புதுச்சேரி 1,178.1 (846.7)
- புதுக்கோட்டை 478.7 (404.2)
- ராமநாதபுரம் 638.2 (486.8)
- சேலம் 243.6 (342.7)
- சிவகங்கை 438.1 (399.4)
- தஞ்சாவூர் 810.3 (525.6)
- தேனி 379.1 (373.8)
- திருநெல்வேலி 645.6 (411.4)
- திருவள்ளூர் 589.9 (588.6)
- திருவண்ணாமலை 436.5 (431.9)
- திருவாரூர் 955.2 (632.5)
- திருச்சி 384.6 (346.9)
- தூத்துக்குடி 488.2 (398.3)
- வேலூர் 238.8 (346.2)
- விழுப்புரம் 659.1 (472.1)
- விருதுநகர் 331.0 (420.0)
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தான் இயல்பான மழையளவை விட 143 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இதைத் தொடர்ந்து அரியலூர், கடலூர், திண்டுக்கல், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் இயல்பான அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதர மாவட்டங்களிலும் இயல்பான அளவையொட்டி மழை பெய்துள்ளது.5 மாவட்டங்களில் மழையளவு வீழ்ச்சி: தர்மபுரி, நாமக்கல், சேலம், வேலூர், விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பெய்துள்ளது.
Source> http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=174185
No comments:
Post a Comment