Monday, August 17, 2009

நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் மாவட்டங்கள்

சென்னை, ஆக. 17:

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் நிலத்தின் அடியில் 75 சதவீதம் பகுதி கடினப் பாறைகளால் ஆனது. மீதமுள்ள 25 சதவீதம் பகுதி மட்டுமே மணல்பாங்கான பகுதிகளைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொதுப் பணித் துறையின் நிலத்தடி நீர்மட்டப் பிரிவு நிபுணர்கள் மாதம்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தைக் கண்காணிக்க 1,746 கிணறுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 618 கிணறுகள் நீர்வளம் குறைந்த, வறண்ட பகுதிகளில் அமைந்துள்ளன.

இதுதவிர நீர்மட்டத்தைக் கண்காணிக்கும் அளவுமானிகள் மூலம் நிலத்தடி நீர்வளம் கண்காணிக்கப்படுகிறது.

பொதுப் பணித் துறை நிபுணர்களின் சமீபத்திய ஆய்வின்படி, மாவட்ட வாரியாக இப்போதைய நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு (நிலத்தின் அடிமட்டத்தில் இருந்து மீட்டரில்):

தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தில்தான் நிலத்தடி நீர்வளம் மிகவும் குறைந்து வருகிறது. இம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 2.4.

நீலகிரி 2.26, நாகப்பட்டினம் 2.52, திருவாரூர் 2.84, சென்னை 3.29, ராமநாதபுரம் 3.32, தூத்துக்குடி 3.47, காஞ்சிபுரம் 3.85, திருநெல்வேலி 4.0, தஞ்சாவூர் 4.19, புதுக்கோட்டை 4.39, கடலூர் 4.52, விழுப்புரம் 4.73.

சிவகங்கை 5.03, பெரம்பலூர் (அரியலூர் உள்பட) 5.32, திருவண்ணாமலை 5.54, விருதுநகர் 5.59, மதுரை 6.13, கரூர் 6.50, திருச்சி 6.74, திண்டுக்கல் 7.24, கன்னியாகுமரி 7.54, சேலம் 7.72,

வேலூர் 7.73, ஈரோடு 7.95, தேனி 8.22, தர்மபுரி (கிருஷ்ணகிரி உள்பட) 8.57. நாமக்கல் 10.21, கோயம்புத்தூர் 11.13.

தொடர்ந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வரும் மாவட்டங்களில் செயல்படுத்தும் வகையில் சிறப்பு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அரசு பரிசீலித்து வருகிறது என்று பொதுப் பணித் துறை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

No comments: