Friday, February 6, 2009

சிவகங்கை மாவட்ட அயெம்வார்ம் (IAMWARM) திட்டத்தில் கண்மாய்களை சரிவர தோண்ட கோரி கிராம மக்கள் போரட்டம்

(இத்திட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள சமுகசெயல்பாட்டாலர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஜாசூல் மாநில அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் கடந்த 2007 பிற்பகுதியில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. ஆர்வமுடைய செயல்பாட்டாளர்கள் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் (Sustainale Livelihood Farmers Association – SLFA) என்ற அமைப்பின் கீழ் சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு செயல்பட்டு வரும் மிகச்சில செயல்பாட்டாளர்களில் திரு. பாலசுப்பிரமணியும் ஒருவர். இனி அவருடைய செயல்பாடுகளை பற்றி...... )

திட்ட நோக்கம்:

பெருகிவரும் மக்கள் தொகையினால் 2001ல் தனிநபர் சராசரியில் 1820 செமீ என்ற அளவில் கிடைக்கப்பெற்ற நீர் 2025ல் 1340 கனமீட்டராக குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பருவமழை பொய்த்தல், நீர்பிடிப்பு மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் நீர் ஆதாரமான பாசான அமைப்புகளுக்கு சரிவர நீர் கிடைக்கவில்லை. வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறன் கூடுதலாக்க நீர், நீராதார அமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான ஒருங்கிணைந்த திட்டம்தான் நீர்வள நிலவள திட்டம். இதில்:
1.பொதுப்பணித்துறை - நீர்வள ஆதார அமைப்பு
2.வேளாண் பொறியியல் துறை
3.வேளாண்மைத்துறை
4.தோட்டக்கலைத்துறை
5.வேளாண் விற்பனைத்துறை
6.வேளாண் பல்கலை கழகம்
7.கால்நடைத் துறை
8.மீன்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்படுத்துவது.

உலக வங்கி கடனுதவி:

தமிழகம் 17 வடிநிலங்களாகவும், 113 உபவடிநிலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 16 வடிநிலங்களில் உள்ள 63 உபவடிநிலங்களில் உலகவங்கி கடனுதவியின் கீழ் 2547 கோடி செலவில், பொதுப்பணித்துறைக்கு மட்டும் 1530 கோடி செயல்படுத்தப்படுகிறது.

கோட்டக்கறையாறு மற்றும் மணிமுத்தாறு உபவடிநிலம்:

சிவகங்கை மாவட்டமானது, தமிழகத்திலேயே அதிகமான கண்மாய்களை உடைய மாவட்டமாகும். இங்கு சிரிதும், பெரிதுமான 615 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 3968 பஞ்சாயத்து யூனியன் கண்மாய்களும் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உற்பத்தியாகி ஓடக்கூடிய கோட்டக்கரையாறு, மணிமுத்தாறு இரண்டுமே காட்டாறுகளாகும். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடும் நீரை தேக்கி வைக்க எந்த ஏற்பாடும் இல்லாத ஆறுகளாகும்.

கோட்டகரையாறு உபவடிநிலம் (55.77 கோடி)

நிதி ஒதுக்கீடு:
1.பொதுப்பணித்துறை - 42.96 கோடி
2.வேளாண் பொறியியல்துறை - 7.44 கோடி
3.வேளாண்மைத்துறை - 1 கோடி
4.தோட்டக்கலைத்துறை - 3.67 கோடி
5.வேளாண் விற்பணைத்துறை - 0.33 கோடி
6.கால்நடைத்துறை - 0.15 கோடி
7.மீன்வளத்துறை - 0.27 கோடி
பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மூலம் 309 கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாருதல், மற்றும் மடைகள் பழுதுபார்த்தல் செயல்பட உள்ளது.

மணிமுத்தாறு உபவடிநிலம் - 70.03 கோடி

இவற்றின் பெரும்பாலன கண்மாய்கள், திருப்பத்தூர், காரைக்குடி தாலுகாக்களை சார்ந்தவை. இவற்றின் கீழ் 407 கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. இதன் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
1.பொதுப்பணித்துறை - 55.58 கோடி
2.வேளாண் பொறியியல்துறை - 6.51 கோடி
3.வேளாண்மைத்துறை - 2 கோடி
4.தோட்டக்கலைத்துறை - 3.67 கோடி
5.வேளாண் விற்பணைத்துறை - 0.55 கோடி
6.கால்நடைத்துறை - 0.29 கோடி
7.மீன்வளத்துறை - 0.34 கோடி

பணிகள் நிறைவேற்றுதல்:

உலக வங்கியின் ஆலோசனை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் (Participatory Irrigation Management – PIM) என்ற கொள்கையின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். திட்டத்தின் நோக்கம், செயல்படுத்தும் பணிகள் குறித்து அனைத்து துறைகளும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கென மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் என்ற பெயரில் ஒரு நடத்தப்படுகின்றது. 653 கண்மாய் பகுதி மக்கள் பயன்பெறும் இவ்வளவு பெரிய திட்டம் பெரும்பாலன மக்களுக்கு தெரிவிக்காமலேயே நிறைவேற்றப்படுகின்றது. அனைத்து துறைகள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், உரங்கள், இயந்திர கருவிகள், பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். (2007ல் துவங்கி 2013 முடிக்கப்படவேண்டிய திட்டம்)


பாலசுப்பிரமணி அவர்களின் தலையீடு:

இப்பணிகளை பற்றிய தகவல்களை பெறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் விடாமல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அன்பாக கேட்டு, அதிகாரத்துடன் கேட்டு பெற குட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டதாய் அடிக்கடி விவசாயிகளின் கூட்டங்களில் கூறுவார். இத்தனை தமிழ்நாட்டில் ஒரளவிற்கு எல்லாதகவல்களும் அடங்கிய திட்டவிளக்க புத்தகம் அச்சடித்த ஒரிரு மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்றும். உலகவங்கியால் புகழப்படும், ஆட்கள் அதிகம் வந்து பார்க்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், தனது கவுண்ஸ்லுக்குட்பட்ட பணிகளை பற்றி நேரடியாகவும், மக்களிடம் கேட்ட தகவல்களின் அடிப்படையில் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை பத்திரிக்கைகள் மற்றும் ஒன்றிய கவுன்ஸ்ஸில் கூட்டங்களில் எலுப்பினார்.

ஒன்றியு கவுன்ஸ்சிலர் குற்றச்சாட்டு:

மானாமதுரை ஒன்றியத்தில் 28 கண்மாய்கள் இத்திட்டத்தின் கீழ் வருகின்றன. அவற்றில் எனது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலநெட்டூர், தெ.புதுக்கோட்டை பஞ்சாயத்துகளில் மட்டும் சுமார் 3200 ஏக்கர் பாசன வசதி பெறும் 12 கண்மாய்கள் வருகின்றன. ஆனால் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பாக நடத்தப்பட்ட எந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு அழைப்பு கிடையாது. திட்டம் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. சிவகங்கை மாவட்டத்தின் முகத்தோற்றத்தை மாற்றக்கூடிய இந்த திட்டத்தை ஒழுவு மறைவின்றி தமிழக அரசு நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலநெட்டூர் பகுதி - ஜாசூல் கள ஆய்வு:

இதனை தொடர்ந்து, 2008 ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நெட்டூர் கண்மாய் பகுதிகளில் அயெம்வார்ம் திட்டத்தினுடைய நீர்வள ஆதார அமைப்பின் சார்பிலான உலகளாவிய டெண்டர் அடிப்படையில் விடப்பட்டு அதன்பேரில் ஈரோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணிகளை செய்தார். பார்த்தீபனூர் மதகுஅணையின் வலது பிரதான கால்வாய் பகுதியில் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் அரசின் மதிப்பீட்டின்படி தூர்வாரப்படாமல் அவசர கதியில் நடைபெற இப்பணிகளை பாரம்பரிய ஆயக்கட்டுதாரர்கள் அமைப்பின் மூலம் தடைசெய்யப்பட்டது. மூன்று நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டது. அதற்கு பொருப்பான அதிகாரிகளை அழைக்க அவர்கள் வர தாமதம் செய்த நிலையில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் திரு. பாலசுப்பிரமணியம் (ஒன்றிய கவுன்ஸ்லர் - மானாமதுரை ஒன்றியம்) அவர்களின் அழைப்பின் பேரில் ஜாசூல் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் பணிகளில் உள்ள குளறுபடிகளை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 21ம்தேதி மேற்கொள்ளப்பட்ட களமேற்கொள்ளப்பட்டது. இக்கள ஆய்விற்கு ஜாசூல் மாநில ஒருங்கினைப்பாளர் திரு. மாரிராஜன், கவுண்ஸ்லர் பாலசுப்பிரமணியம், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர், நீரிணை பயன்படுத்துவோர் சங்க தலைவர், அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் பணிப்பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்பட வேண்டும் என எஸ்ட்டிமேட்டில் கூறப்பட்டுள்ள இடங்களில் பணி நடைபெற்ற பின்னர் அந்த இடங்களில் புற்கள் அப்படியே இருந்தது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயினர். 1ஸ்கொயர் மீட்டர் அளவிற்கு மண்ணை அப்புர்றப்படுத்தி கரையில் போட்டு சமப்படுத்த குட்டத்தட்ட ரூ. 14000 என ஒதுக்கப்பட்ட உலகளாவிய டெண்டரில் செய்யப்பட்ட (2 மீட்டர் ஆழப்படுத்தப்பட்ட அல்லது மண் அள்ளப்பட்ட இடத்தில்) புல் கூட புடுங்கப்படாத நீர்நிலவள திட்டத்தின் செயல்பாடுகள் அதற்கு பின்னால் வரவிருக்கின்ற உலகவங்கி நிபந்தனைகள் பற்றி விளக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.பணிகளுக்கு பொருப்பான அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து பணிகளை முறையாக செயல்படுத்த வைப்பது.
2.ஏற்கெனவே பணிமுடிவு பெற்றதாக கூறப்பட்டுள்ள இடங்களில் திரும்பவும் எஸ்ட்டிமேட்டில் உள்ளபடி பணிகளை செய்யவைப்பது அதுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புல்டோசர்களை செயல்பட அனுமதிக்ககூடாது.
3.திட்டத்தின் நோக்கத்தை பற்றி அதிகாரிகளை தெளிவுபடுத்த கோறுவது மற்றும் கிராம சபைகளில் அதனை பற்றி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த தீர்மானங்கள் அதிகாரிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகரிகள் வந்து மக்களிடம் மன்னிப்புகோரி, தவறு நடக்காமல் பார்த்துகொள்வதாக உறுதியளித்தன் பேரில் தற்பொழுது பணிகள் நடைபெறுகின்றது.

சுப்பன் கால்வாய் மோசடி குறித்த போராட்டம்:

இதனை தொடர்ந்து திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் கவுண்ஸ்லுக்குள் வரும் அயெம்வார்ம் திட்டத்தின் சுப்பண் கால்வாய் திட்டத்தில் நடைபெற்று வரும் முறைகேடு பற்றி பாலசுப்பிரமணி அவர்கள் கவுண்ஸில் கூட்டத்தில் பேச, அது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் ஆழமாக பதிந்து அதனைத்தொடர்ந்து தொடர் போரட்டம், பஸ் மறியல் என போரட்டம் திசை மாற மாவட்ட ஆட்சித்தலைவர் தலையிட்டு சுப்பண் கால்வாய் பணிகளை சரிவர செய்ய தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இப்போரட்டங்கள் அதனை தொடர்ந்து எழுந்துள்ள உலகவங்கிக்கெதிரான, ஊழலுக்கெதிரான மக்கள் எழுச்சியை எவ்வாறு சரியான பதையில் கொண்டு செல்வது என்பது பற்றிய சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் விதமாக நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் கிளைகளை உருவாக்குவது பற்றி சிந்திக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை சிவகங்கை மாவட்ட ஜாசூல் அமைப்பின் மாவட்ட குழு திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மேற்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை செய்திகள் மற்றும் நிழல் படங்களுக்கு இங்கே சொடுக்கவும் http://picasaweb.google.co.in/jasul.tn/KottakoraiyaruSubBasinMellanatturTankFactFindingVisit#

ஆக்கம்:
மாரிராஜன்.தி
மாநில ஒருங்கிணைப்பாளர் - ஜாசூல் தமிழ்நாடு

No comments: