Friday, February 6, 2009

உலகவங்கியின் அயெம்வார்ம் திட்ட மதிப்பீட்டு குழுவிடம் ஜாசூல் மாவட்ட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கண்மாய்களை தனியார்மயமாக்ககூடாது என கோரிக்கை மனு

ஆத்தூர் - சேலம்:
வஸிஸ்த்தா நதி துணைவடிநிலப்பகுதி நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டம் - சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி வட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வஸிஸ்தா நதியில் பெத்தநாயக்கன்பாளையம் வரை 33 அணைக்கட்டுகள், 16 ஏரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களை ஜாசூல் சேலம் மாவட்ட குழுவின் சார்பில் கடந்த ஆக்டோபர் 3,4,5 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தது. சுமார் 100 கி.மீ பயணம் செய்த ஆய்வு குழு ஏரிகளில் செய்யப்படும் சிமெண்ட் சார்ந்த பணிகள் மேலோட்டமாக இருந்ததை கண்டதது. நல்ல கட்டமைப்புகளாய் இல்லாததை நேரடியாய் கண்டது. இக்குழு தான் கண்ட விசயங்களை ஜாசூல் கோரிக்கைகளுடன் இணைத்து அக்டோபர் மாதம் 5ம் தேதி, ஆத்தூர் வந்த உலகவங்கி அயெம்வார்ம் திட்ட அமலாக்க (World Bank implementation Support Mission – WBISM) குழுவிடம் கொடுத்தது. முதலில் மனு கொடுக்க சில விவசாயிகளை அதிகாரிகள் உள்ளூர் பெரிய விவசாயிகளின் துனையுடன் அனுமதிக்கவில்லை. ஆனாலும் விவசாயிகள் கூட்டத்தில் முந்திச்சென்று திட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை, எல்லாம் ஏமாற்று வேலை என கோஷமிட்டு மனு அளித்தனர். அதனை மொழி பெயர்த்தவர் என்னவாறு மொழி பெயர்த்தார் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அரசு அதிகாரிகள் உலகவங்கி குழுவினரை குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் அழைத்து சென்று படம் காட்டியது நன்றாக இருந்தது.

விழுப்புரம்:

கடந்த அக்டோபர் 21ம் தேதி உலக வங்கியின் அயெம்வார்ம் திட்ட அமலாக்க கண்காணிப்பு குழுவினர் கலெக்டர் தலைமையில் கருத்து கேட்டனர். கிராமங்களில் மனு அளிக்க காத்திருந்த விவசாயிகள் உலகவங்கி குழுவின் பயணம் பாதியில் நிற்த்தப்பட்டதால் மாவட்ட அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். இங்கு ஜாசூல் விழுப்புரம் மண்டலம் சார்பில் (கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை) கோரிக்கை மனு அழிக்கப்பட்டது.

No comments: